Friday, February 26, 2016

PENCIL DRAWING - HELEN-KELLER

PENCIL DRAWING
தினம் ஒருஓவியம் வரைவோம் - 27-02-2016

HELEN-KELLER 


HELEN-KELLER 

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
ஹெலன் கெல்லர், அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள துஸ்கும்பியாவில் 1880ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் நாள் பிறந்தார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே பிறந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். தனது உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த முடியாமல் தவித்த ஹெலன் கெல்லர், முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்.
1887ஆம் ஆண்டு, ஹெலன் கெல்லரின் பெற்றோர், அலெக்சாண்டர் கிரகாம் பெல்லை சந்தித்தனர். அலெக்சாண்டர், அவர்களைப் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளிக்கு அனுப்பினார். கிரகாம்பெல் ஆன் சல்லிவன் என்ற ஆசிரியை ஹெலன் ஹெல்லருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அடுத்த 49 ஆண்டுகளைக் கெல்லரும் சல்லிவனும் ஒன்றாகவே கழித்தனர்.
பிறர் பேசும் பொழுது அவர் உதடுகளில் கை வைத்து அதிர்வுகள்மூலம் அவர் பேசுவதை புரிந்துகொள்ளும் கலையைக் கெல்லருக்கு சல்லிவன் கற்பித்தார். மேலும், கெல்லரின் உள்ளங்கைகளில் எழுதி, எழுத்துக்களைப் புரிந்து கொள்ள பழக்கினார். இப்படி ஒவ்வொரு பொருளையும் தொட்டு தொட்டுத் உணர்ந்து கற்றார் ஹெலன் கெல்லர். பிறகு சிறிது சிறிதாக எழுதக் கற்றுக்கொண்ட கெல்லர் கண் பார்வையற்றோருக்கோன பிரெயில் எழுத்து முறையைக் கற்றுக் கொண்டார். எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் திறமை கெல்லருக்கு இயல்பாகவே இருந்தது. பத்து வயது நிறைவதற்கு முன் ஹெலன் கெல்லர், கண் பார்வை அற்றோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், லத்தீனம் ஆகிய மொழிகளைக் கற்றார்.

HELEN-KELLER 

ஹெலன் கெல்லர்
1888 இல் ஹெலன் கெல்லர் பார்வையற்றோருக்கான பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார். 1904ஆம் வருடம், கெல்லர், சல்லிவனுடன் நியூயார்க் சென்று அங்கேயிருந்த காது கேளாதோருக்கான ரைட்-ஹுமாஸன் பள்ளியில் சேர்ந்தார். அங்கு கெல்லருக்கு பேசக் கற்றுத்தர சாராஃபுல்லர் என்ற ஆசிரியை உதவினார். தனது ஆசிரியை சாராஃபுல்லர் பேசும்போது அவரது வாய் உதடுகள் மற்றும் நாக்கின் அசைவுகளைத் தொட்டு தொட்டு உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பேசக் கற்றுக்கொண்டார் ஹெலன் கெல்லர். தட்டுத் தடுமாறி பேசத் தொடங்கிய அவர் பல ஆண்டுகள் பயிற்சி செய்தார். கடைசிவரை அவரால் தெளிவாகப் பேச முடியவில்லை ஆனால் ஹெலன் கெல்லர் ஒருமுறைகூட மனம் தளரவில்லை. மகளிருக்கான கேம்பிரிட்சு பள்ளியில் இணைந்தார். தனியாகப் பாடங்களைக் கற்றுக்கொண்ட கெல்லர் பல்கலைக் கழகத்திற்கு செல்ல விரும்பினார். 1900 இல் ராட்கிளிஃப் பல்கலைக்கழகம் மிகுந்த தயக்கத்துடன் கெல்லரை சேர்த்துக்கொண்டது. ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காது கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்துப் இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார்...
எழுத்தாளராக[தொகு]
ஆஸ்திரிய தத்துவவியலாளரான வில்லம் ஜெருசலம் என்பவர் ஹெலன் கெல்லருடைய எழுத்தார்வத்தை வெளிக்கொணர உதவினார்.[1] தனது கல்லூரி நாட்களிலேயே 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். கல்லூரி நாட்களில் வெளிப்பட்ட ஹெலனின் எழுத்தார்வம் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் அவரைத் தொடர்ந்திருந்தது. 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற அவருடைய படைப்பு பெண்கள் இதழொன்றில் தொடராக வெளிவந்து பின் புத்தகமாகப் பதிப்பிக்கப்பட்டது. மராத்தி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, ஹெலனின் படைப்புகளில் இன்றும் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது.
தன்னம்பிக்கை - ஒரு கட்டுரை, நான் வாழும் உலகம், கற்சுவரின் கீதம், இருளிலிருந்து, என் மதம், மாலைக்காலத்து அமைதி, ஸ்காட்லாந்தில் ஹெலன் கெல்லர், ஹெலன் கெல்லரின் சஞ்சிகை, நம்பிக்கை கொள்வோம், ஆன் சல்லிவன் மேஸி - என் ஆசிரியை, திறந்த கதவு போன்றவை அவருடைய பிரசுரமான படைப்புகள் சில. இவைதவிர காது கேளாமை, பார்வையின்மை, சமூகவியல், சமூகம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணுரிமை போன்றவை தொடர்பாகப் பல கட்டுரைகளையும், ஆக்கங்களையும் நாளிதழ்களுக்கும், வாராந்திர, மாதாந்திரப் பத்திரிகைகளுக்கும் பங்களித்தவண்ணமிருந்தார்.
அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்குச் சற்றும் சளைக்காதவரான கெல்லர், சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார். இவர் உழைப்பாளர் உரிமைகளையும், சோசியலிச தத்துவத்தையும் ஆதரித்துப் பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக லாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினார். ஹெலன் தன் வாழ்நாளைக் கண்ணிழந்தோர் மற்றும் காதுகேளாதோர்க்காகச் செலவிட்டார். அதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்தார். அவர்களுக்கென பள்ளிகள் திறக்கச் செய்யும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் உலக நாடுகள் பலவற்றுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹெலன் கெல்லர், ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஹெலன் கெல்லர் நிதி என்ற பெயரில் நிதி ஒன்றினைத் தொடங்கி, அதில் சேர்ந்த தொகையான ரூபாய் ஒன்றரை கோடியைப் பள்ளிகளுக்கு வழங்கினார். பார்வையற்றோர்க்கென தேசிய நூலகம் ஒன்றனை உருவாக்கி, உலகம் முழுவதிலும் இருந்து நூல்கள் வந்து குவிய ஏற்பாடு செய்தார். தன்னைப்போல அவர்களும் மீட்சி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் எண்பத்தெட்டு வயது வரை அயராது உழைத்தார்.
அரசியல்[தொகு]
கெல்லர் ஒரு உலகப் புகழ் பெற்ற பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திடழ்ந்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு வழக்குரைஞராகவும் திகழ்ந்தார். அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்ததில் ஹெலன் கெல்லரின் பங்களிப்புகள் அதிகமானது. உட்ரோ வில்சனின் எதிர்பாளராகவும் ஒரு சோசலிச வாதியாகவும் விளங்கினார். அமெரிக்க பிறப்புக் கட்டுப்பாடு சங்கத்தின் ஆதரவாளராகத் தீவிர அரசியலில் ஈடுபட்டார். 1915 ஆம் ஆண்டு அவர் ஜார்ஜ் கெஸ்லர் இன்பவருடன் இணைந்து 'ஹெலன் கெல்லர் சர்வதேச அமைப்பு'(HKI) ஒன்றைத் தொடங்கினார். இந்நிறுவனம் பார்வை, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த ஆய்வுகளுக்காக நிறுவப்பட்டது 1920 ஆம் ஆண்டு அவர் அமெரிக்க உள்நாட்டு உரிமைகளுக்கான ஒன்றியம் (ACLU) ஒன்றைத் தொடங்கினார். 40 நாடுகளுக்கு ஆன் சல்லிவனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கெல்லர் அடிக்கடி ஜப்பான் சென்று வந்ததால் ஜப்பான் மக்களின் மனங்கவர்ந்த பெண்மனியாக ஆனார். கெல்லர் குரோவர் கிளீவ்லேண்ட், லிண்டன் பி ஜான்சன் உள்ளிட்ட பல அமெரிக்க அதிபர்களைச் சந்தித்தார். புகழ்பெற்ற நபர்களான அலெக்சாண்டர் கிரகாம் பெல், சார்லி சாப்ளின், மார்க் டுவெயின் போன்றோருடன் தொடர்பில் இருந்தார். கெல்லர் மற்றும் ட்வைன் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கெல்லர் மற்றும் மார்க் டுவெயின் ஆகியோருடைய கருத்துகளால் இருவரும் தீவிரவாதிகளாகக் கருதப்பட்டனர். ஆனால் இருவருடைய மக்களுக்கான பொதுநலப் பணிகளே மேலோங்கியதால் இவர்களுடைய அரசியல் கருத்துகள் மறக்கப்பட்டன.[7]கெல்லர் அமெரிக்க சோசலிசக் கட்சியின் உறுப்பினராகவும் ஆதரவாளராகவும் இருந்தார்.[8]
இறுதிக் காலம்[தொகு]
ஹெலன் கெல்லர் 1961 இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தனது இறுதி நாட்களில் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று.[5] 1964, செப்டம்பர் 14 இல் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபர் லின்டண் பி. தாம்சன் அதிபருக்கான சுதந்திரப் பதக்கத்தை ஹெலன் கெல்லருக்கு வழங்கினார். இது அமெரிக்கக் குடியரசின் மிக உயர்ந்த இரு பதக்கங்களுள் ஒன்றாகும். 1965 இல் கெல்லர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நாட்டின் மிகச்சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] கெல்லர் பார்வையற்றோருக்கான நிதி திரட்டுவதிலேயே தனது வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டார். இன்னும் ஒரு வாரத்தில் தனது 88 ஆவது பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் 1968, ஜூன் 1 ஆம் நாள் தூக்கத்திலேயே உயிர் துறந்தார். இவரது சேவையைக் கருதி இவரது உடல் வாஷிங்டன் டி. சியில் ஆன் சல்லிவன், பாலி தாம்சன் ஆகியோர்ரது உடலருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஊடகங்களில்[தொகு]
ஹெலன் கெல்லருடைய வாழ்க்கை பலமுறை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 1919 இல் டெலிவரன்சு என்ற வசனமில்லாப்படமாக எடுக்கப்பட்டது.[9] காத்ரின் கோர்னெல் என்பரால் ஹெலன் கெல்லரின் கதை என்ற பெயரில் குறும்படமாக எடுக்கப்பட்டது. மேலும் ஹார்ஸ்ட் கார்பொரேசன் என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் ஹெலனின் வாழ்க்கையை தொடராகவும் வெளியிட்டது. ஹெலன் கெல்லர் எழுதிய சுய வரலாற்று நூலான எனது கதை நாடகமாகவும் எடுக்கப்பட்டது. இது பின்னர் 1962 இல் திரைப்படமாக்கப்பட்டு ஆஸ்கார் விருது பெற்றது. 1979 மற்ரும் 2000 த்தில் மீண்டும் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டது. 1984 இல் கெல்லருடைய வாழ்க்கை தொலைக்காட்சித் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது[10] இப்படம் ஹெலன் கெல்லருடைய கல்லூரி மற்றும் அரசியல் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருந்தது. 2005 இல் கெல்லரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'பிளாக்' என்ற பாலிவுட் திரைப்படம் எடுக்கப்பட்டது. இதே ஆண்டுல் சுவேடன்பர்க் நிறுவனத்தால் கெல்லரைப் பற்றிய குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டது. இதில் கெல்லர் பார்வை, காது, வாய் என்ற முப்புலனும் பாதிக்கப்பட்ட கெல்லரின் நம்பிக்கை மற்ரும் மனவுறுதியின் காரணமாகப் பெற்ற வெற்றிகள் எடுத்துச் சொல்லப்பட்டன.
மார்ச் 6, 2008 இல் நியூ இங்கிலாந்து வரலாற்றுக் கழகம் ஹெலன் கெல்லர் தனது ஆசியரான ஆன்சல்லிவனுடன் இருக்கும் படங்களையும் கெல்லர் தனது பொம்மையுடன் இருக்கும் படங்களையும் மறுபடியும் வெளியிட்டு உலகெங்கும் கவனத்தை ஈர்த்தது.[11] [12] இந்நிறுவனம் மேலும் ஹெலன் கெல்லர் குரலசைவு மூலம் கற்றுக்கொண்ட ஒளிப்படங்களையும் வெளியிட்டது.[13]
சிறப்புகள்[தொகு]
Helen Keller as depicted on the Alabama state quarter
1999களில் கெல்லர் இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிகச் சிறப்புமிக்கப் பெண்மணியாக அறியப்பட்டார். 2003 இல் அலபாமா மாநிலம் அம்மாநிலத்தின் சிறப்புமிக்கக் குடிமகளாக அறிவித்தது.[14]
மேலும் அலபாமாவில் உள்ள செப்பீல்டு மருத்துவமனை ஹெலன் கெல்லர் மருத்துவமனையாக அர்ப்பணிக்கப்பட்டது.[15] ஸ்பெயின், கடாபி, லாடு, இஸ்ரேல், போர்சுகல்,லிபெயின், பிரான்சு ஆகிய நாடுகளில் தெருக்களுக்கு ஹெலன் கெல்லருடைய பெயர் சூட்டப்பட்டது.[16][17] இந்தியாவின் மைசூர் மாகாணத்தில் கே.கே. சீனிவாசன் என்பவரால் நிறுவப்பட்ட வாய்பேசாதோர் மற்ரும் காதுகேளாதோருக்கான முன்பருவப் பள்ளிக்கு ஹெலன் கெல்லருடைய பெயரால் மாற்றப்பட்டது.
2009, அக்டோபர் 7 இல் அலபாமா மாநிலத்தில் ஹெலன் கெல்லருடைய வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. மேலும் ஹெலன்கெல்லர் முதன் முதலாக ஏழு வயதான போது ஆன் சல்லிவனுடன் தண்ணீரைத் தொட்டுணர்ந்து தண்ணீர் என்பதற்கான பொருளை ஊணர்ந்த அக்காட்சி சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. அங்கு பிரெய்லி எழுத்துகளில் "உலகிலேயே எங்கும் காணமுடியாத தொட முடியாத இதயத்தால் உணரப்பட்ட அழகிய பொருள்." என்று பொறிக்கப்பட்டுள்ளது.[18] முதன் முதலில் மாற்றுத் திறனாளிக்கு அதுவும் குழந்தைப் பருவத்தில் தலைநகரில் சிலை வைக்கப்பட்டது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.[19][20][21]

HELEN-KELLER 

No comments:

Post a Comment

page

Followers

J.ELANGOVAN.TRICHY